மேலும் செய்திகள்
பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை
28-Jul-2025
திருப்பூர்; பாலவிகாஸ் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர், ராம் நகர் மண்டலி, பாலவிகாஸ் மாணவர்கள் பெற்றோர் களுக்கு பாத பூஜை நடத்தும் நிகழ்ச்சி, குமரானந்தபுரம் காமாட்சி அம்மன் மண்டபத்தில் நடந்தது. அதேபோல், தாராபுரம் சின்னக்காபாளையம் பஜனை மண்டலி சார்பிலும் நடைபெற்றது. பாத பூஜைக்குப் பின் பஜனை நிகழ்ச்சியும், வேத நிகழ்வும் நடந்தது. உறுதி மொழியேற்பும், சிறப்பு சொற்பொழிவும் தொடர்ந்து மங்கள ஆரத்தியும் நடந்தது. இவ்விரு நிகழ்ச்சியில், ஸ்ரீசத்யசாய் சேவா மையம், பால விகாஸ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
28-Jul-2025