உங்க கதைக்கு நீங்க தான் ஹீரோ!
ஒவ்வொரு தொழிலிலும் வருவாய் மற்றும் மரபு சார்ந்த விஷயங்கள் முக்கியம். தொழில் துறையில் இருப்போர், தங்களுக்கான ஒரு பிராண்டட் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நமது கதைக்கு நாம் தான் ஹீரோவாக இருக்க வேண்டும். நம் கதையை நாம் தான் சொல்ல வேண்டும்.அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனியாக 'பிராண்டட்' உருவாக்க வேண்டும்; அதன் மதிப்பை கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும். தங்களது உற்பத்தி பொருளை, வாடிக்கையாளர்களிடம் எப்படி கொண்டு போய் சேர்க்கிறோம் என்பது மிக முக்கியம். போட்டியாளர்களை சமாளிக்க, தயாரிப்பு பொருட்களின் மதிப்பை கூட்ட வேண்டும்; தயாரிப்பில் தரம் இருக்க வேண்டும்.தங்களது பிராண்டுக்கென ஒரு அடையாளம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தயாரிப்பு பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மிக முக்கியம். அதற்கான திட்டமிடலை வகுக்க வேண்டும்.-- விக்னேஷ் ராஜா'எய்ட் பிராண்ட் ஸ்ட்ராடெஜிஸ்' நிறுவனர்