திருப்பூர்; சொத்துவரி உயர்வால் கடும் அதிருப்தி நிலவுவதால், திருப்பூர் மாநகராட்சி விரிவாக்க திட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, 2007 டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்டது. நகராட்சியாக இருந்த திருப்பூர், அப்படியே 52 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அதன்பின், 2011ல், 60 வார்டுகளாக விரிவாக்கப்பட்டது. பழைய 52 வார்டுகளுடன், நல்லுார் மற்றும் வேலம்பாளையம் நகராட்சிகள், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், முத்தணம்பாளையம், மண்ணரை, நெருப்பெரிச்சல் தொட்டிபாளையம், செட்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, 60 வார்டுகளாக, 2011ல் தேர்தல் நடந்தது.தற்போதைய நிலவரப்படி, 160 சதுர கி.மீ., பரப்பளவுடன் இயங்கி வரும், திருப்பூர் மாநகராட்சி, 85 வார்டுகளாக உயர்த்தவும், 2023ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், அடுத்த (2027ம் ஆண்டு) தேர்தலின் போது, விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி தேர்தல் நடக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளையும் இணைக்க உத்தேசிக்கப்பட்டது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வெளியான அரசாணையில், பொங்கலுார் ஒன்றியம் - நாச்சிபாளையம், அவிநாசி ஒன்றியம் - கணியாம்பூண்டி ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ அனைத்து புள்ளிவிவரங்களும் பெற்று, வார்டு பிரிப்பு பணிக்கு ஆயத்தமாகும் நேரத்தில், திடீரென, இரண்டு ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படுமென அறிவித்துள்ளது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.கிராமப்புற மக்கள் நிம்மதிகுறிப்பாக, கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், மாநகராட்சியுடன் இணையப்போவதில்லை என்பதால் நிம்மதி அடைந்துள்ளனர். ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்க போவதில்லை; தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, அடுத்த உள்ளாட்சி தேர்தல் வரை நிர்வகிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை, கோவை மாநகராட்சியை காட்டிலும், திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு என, அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழக அளவில், சொத்துவரி உயர்வு நடவடிக்கை இருந்தாலும், திருப்பூரில் அபரிமிதமான உயர்வு என்று, பொதுமக்களும் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைந்தால், சொத்துவரி உயருமென, கிராமப்புற மக்களும் அதிருப்தியடைய வாய்ப்புள்ளது. அதனால், மக்களை சமாதானப்படுத்தும் வகையில், அரசாணையில், இரண்டு ஊராட்சிகள் மட்டும் இணையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சி தான்...
இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்த பின், தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. மாநகராட்சி சொத்து வரி உயர்வால், கடும் அதிருப்தி நிலவுகிறது. கிராம ஊராட்சிகளை இணைத்தால், சொத்துவரி உயரும். எந்த வசதிகளும் உடனடியாக கிடைக்காது என, மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனாலேயே, தற்போதைக்கு இரண்டு ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.சொத்துவரி உயர்வை குறைக்க, அரசு பரிசீலித்து வருகிறது. எப்படியிருந்தாலும், அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, திட்டமிட்டபடி மாநகராட்சி விரிவாக்கம் நடக்க வாய்ப்புள்ளது. இரண்டு ஊராட்சிகளும் தற்போது இணைய வாய்ப்பு இல்லை. 2027ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இணைத்து, தேர்தல் நடத்த முடியும். இருப்பினும், மற்ற ஊராட்சிகள் பெயர் அரசாணையில் இல்லாதது மக்களுக்கு மகிழ்ச்சிதான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மக்களுக்கு மகிழ்ச்சி தான்...இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்த பின், தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. மாநகராட்சி சொத்து வரி உயர்வால், கடும் அதிருப்தி நிலவுகிறது. கிராம ஊராட்சிகளை இணைத்தால், சொத்துவரி உயரும். எந்த வசதிகளும் உடனடியாக கிடைக்காது என, மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனாலேயே, தற்போதைக்கு இரண்டு ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.சொத்துவரி உயர்வை குறைக்க, அரசு பரிசீலித்து வருகிறது. எப்படியிருந்தாலும், அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, திட்டமிட்டபடி மாநகராட்சி விரிவாக்கம் நடக்க வாய்ப்புள்ளது. இரண்டு ஊராட்சிகளும் தற்போது இணைய வாய்ப்பு இல்லை. 2027ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இணைத்து, தேர்தல் நடத்த முடியும். இருப்பினும், மற்ற ஊராட்சிகள் பெயர் அரசாணையில் இல்லாதது மக்களுக்கு மகிழ்ச்சிதான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.