உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச பிரீஸர் பாக்ஸ் வழங்கல்

இலவச பிரீஸர் பாக்ஸ் வழங்கல்

அவிநாசி: தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில் பிரீஸர் பாக்ஸ், அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி அருகே தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச ப்ரீஸர் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவா, சதீஷ்குமார், ரோட்டரி உதவி கவர்ன் விஜயபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். துாய்மைபணியாளர்களுக்கு ரோட்டரி உறுப்பினர் ராஜசேகர் கையுறை வழங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்பட்டது. ரோட்டரி முன்னாள் தலைவர்கள் நடராஜன், ஆறுமுகம், செயலாளர் அருள்குமார், பொருளாளர் நடராஜன் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி