தேனீக்கள் வளர்ப்பு இலவசப் பயிற்சி
திருப்பூர்: தேனீ வளர்ப்பு மற்றும் தேன் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்புக்கான 20 நாள் இலவசப் பயிற்சியில் சேர, கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் அழைப்பு விடுத்துள்ளது. குன்னத்துார் அருகே 16 வேலம்பாளையம் மகளிர் குழு அலுவலகத்தில் நடைபெறும் இப்பயிற்சியில், 19 முதல் 50 வயதுக்குட்பட்ட, எழுதப் படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் சேரலாம். கிராமப்புற வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சி நிறைவில் சான்றிதழும், சுயதொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும். பதிவு நாளை (12ம் தேதி) நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 99525 18441, 86105 33436 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.