உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலத்திட்ட உதவிகள் வழங்கல் நண்பர்கள் குழு ஏற்பாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கல் நண்பர்கள் குழு ஏற்பாடு

உடுமலை:உடுமலையில், 'அன்பால் இணைவோம்' நண்பர்கள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உடுமலை சுற்றுப்பகுதிகளில் வசிக்கும், 100 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகை பொருட்கள், இனிப்பு, சேலை, டி-சர்ட் உள்ளிட்டவை தீபாவளி பண்டிகைக்காக வழங்கப்பட்டது. ரூ.2 லட்சம் மதிப்பிலான இப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'அன்பால் இணைவோம்', குழு ஒருங்கிணைப்பாளர் ஜானகிராம் ஏற்பாடுகளை செய்திருந்தார். உடுமலை கிழக்கு லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பிற உயிர் நேசி குழுவினர், சமூக ஆர்வலர்கள் சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை