கேடில் முடிந்த கூடா நட்பு
திருப்பூர்: தாராபுரத்தை சேர்ந்த அருண்குமார், 21. நண்பர் கோகுல், 22. இவர்களை சந்திக்க திண்டுக்கல்லை சேர்ந்த நண்பர்கள், நான்கு பேர் வந்தனர். மது அருந்தினர்; போதையில் தகராறு ஏற்பட்டது. அதில், அருண்குமார், கோகுல் ஆகியோரை தாக்கி விட்டு, டூவீலர், மொபைல் போனை, நான்கு பேரும் பறித்து சென்றனர். புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். ஒட்டன்சத்திரம் ரோட்டில் சந்தேகப்படும் விதமாக சென்ற, நான்கு பேரிடம் விசாரித்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன், 29, கவியரசு, 26, தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித், 35 மற்றும் கணேசன், 24 என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, டூவீலர், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.