உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிரிப்டோ முதலீடு ஆசை காட்டி ரூ.38 லட்சம் சுருட்டிய கும்பல்

கிரிப்டோ முதலீடு ஆசை காட்டி ரூ.38 லட்சம் சுருட்டிய கும்பல்

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த 45 வயது நபருக்கு கடந்த ஆண்டு அக்., மாதம் வாட்ஸ்ஆப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. தொடர்பு கொண்டு பேசிய நபர், தற்போது மலேசியாவில் இருப்பதாகவும், தனது உறவினர் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் இருப்பதாகவும் கூறி, இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்தார். இதை தொடர்ந்து 3.80 லட்சம் ரூபாயை அந்நபர் முதலீடு செய்தார். அதற்கு, 60 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. பணத்தை எடுக்க, முன்வரி மற்றும் கூடுதல் பாதுகாப்பு கட்டணங்களை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை நம்பிய அவர், குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு, 34.25 லட்சம் ரூபாய் செலுத்தினார். லாபத்தை எடுக்க முயன்ற போது ஏமாற்றப்பட்டதை தெரிந்தார். புகாரின் பேரில், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை