உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்டும் விவகாரம்; சட்டப்படி அணுக திட்டம்

குப்பை கொட்டும் விவகாரம்; சட்டப்படி அணுக திட்டம்

திருப்பூர்; முதலிபாளையம் பகுதியில் பாறைக்குழியில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் மாலை, சென்னிமலைப்பாளையம் கோவில் மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று விவாதித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது;திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சட்ட விரோதமாக பல்வேறு வகை கழிவு குப்பைகளை, முதலிபாளையம், நல்லுார் பகுதியில் உள்ள காலாவதியான பாறைக்குழியில் கொட்டி வருவதால், நீர், காற்று, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மக்கள், வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்செயலை கண்டித்து, நேற்று முன்தினம், 800க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், 'அரசு அலுவலர்கள் முன்னிலையில், குப்பை கொட்டுவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும்; அதுவரை குப்பை கொட்டும் வாகனங்கள் வராது' என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், தங்கள் வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை; அதிகாரிகள் யாரும் வரவில்லை.நேற்று முன்தினம், கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், திருப்பூர் மேயர், 'போராட்டக்குழுவை சேர்ந்தவர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார்; இது, தவறான வழிநடத்துதல். அதன்படி, போராட்டக் களத்தில் முன்களத்தில் நின்று போராடியவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, பெண்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாநகராட்சியின் குப்பைக் கொட்டும் விவகாரத்தை சட்டப்படி அணுகுவது; களத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி