உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை மேயர் வார்டில் தொடரும் அவலம்; சாக்கடையில் அடைப்பு: பொதுமக்கள் அவதி

 குப்பை மேயர் வார்டில் தொடரும் அவலம்; சாக்கடையில் அடைப்பு: பொதுமக்கள் அவதி

திருப்பூர்: கடந்த வாரம், குழாய் பதிப்பு சீரமைப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால், சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்ட நிலையில், இப்போது சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், வீதிகளில் கழிவுநீர் பாய்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 49 வது வார்டு செரங்காடு பகுதியில் சாக்கடை அடைப்பு காரணமாக தெரு முழுவதும் கழிவு நீர் வழிந்தோடுகிறது. தற்போது மேயராக உள்ள தினேஷ்குமார் வெற்றி பெற்ற இந்த வார்டல், சுப்ரமணி நகர், என்.பி. நகரில், குறுக்கு வீதிகளில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. சுப்பிரமணி நகர் வீதிகளில் அமைந்துள்ள கால்வாய்களில் சேகரமாகும் கழிவு நீர் பிரதான கால்வாயை அடைந்து அருகேயுள் ஓடையில் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 3வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கிக் கிடக்கிறது. தற்போது, கழிவு நீர் ரோடு முழுவதும் பரவி செல்கிறது. ஏறத்தாழ, 23 அடி அகலமுள்ள இந்த ரோடு முழுவதும் கழிவு நீர் பாய்ந்து செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். வீடுகள் முன்புறம் தேங்கி நிற்கும் கழிவுகள் கடும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இது மேயர் தினேஷ்குமார் வெற்றி பெற்ற வார்டு. இருப்பினும் இது போன்ற பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருப்பது அப்பகுதியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் அவதியை குறைக்கும் வகையில், சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ