மேலும் செய்திகள்
'விவசாயிகள் நலனுக்கு பா.ஜ., துணை நிற்கும்'
09-Dec-2024
விரிவடையும் விவசாயிகள் போராட்டம்
25-Nov-2024
பல்லடம்: கோவை மாவட்டம், இருகூரில் இருந்து சூலுார் வழியாக, திருப்பூர் மாவட்டம், முத்துார் வரை, விளை நிலங்கள் வழிபாக செல்லும் எரிவாயு குழாய்களை, சாலை வழியாக கொண்டுசெல்ல வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பாக, பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையிலான விவசாயிகள் சிலர், சமீபத்தில், டெல்லி சென்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்பூரியை சந்தித்து மனு கொடுத்தனர்.இதில், பங்கேற்ற உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்தி, சாலை ஓரமாக குழாய் பதிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அமைச்சரை சந்தித்தோம்.முன்னதாக, பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விவசாயிகள் கோரிக்கையின்படி, மாற்றுப்பாதையை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், மத்திய செயலர் மற்றும் இணை செயலர் ஆகியோரையும் சந்தித்து விவரங்களை கூறினோம். இறுதியாக,மத்திய அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.இப்பிரச்னை குறித்து தனக்குத் தெரியும் என்றும், மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
09-Dec-2024
25-Nov-2024