உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிகாரியிடம் கடிதம் பெற்ற பின் கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு

அதிகாரியிடம் கடிதம் பெற்ற பின் கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு

பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய் கிராமத்தில், மாநகராட்சி குப்பைகளை கொட்டி, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம், காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் ஆகியவை நடந்தன. நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து, நேற்று நடந்த கிராமசபா கூட்டத்தை, இடுவாய் கிராம மக்கள் புறக்கணித்தனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது: கடந்த முறை நடந்த கிராமசபா கூட்டத்திலேயே குப்பை பிரச்னைக்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம் ஏன் அதை செயல்படுத்தவில்லை? மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லாதது ஏன்? அவ்வாறு சென்றிருந்தால், இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது. எனவே, எங்களது இந்த தீர்மானத்துக்கு செயல் வடிவம் கொடுத்துவிட்டு, அதன்பின், கிராமசபா கூட்டம் நடத்துங்கள். அதுவரை, கிராமசபா கூட்டத்தில் மக்கள் பங்கேற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, கோர்ட் மூலம் இந்த விவகாரத்தை சந்திப்பதாக பி.டி.ஓ. மூலம் எழுத்துப்பூர்வமாக எழுதி கையொப்பம் பெறப்பட்டது. இதேபோல், விவசாயம், கால்நடை தொழில் உள்ள இப்பகுதியில், குப்பை கிடங்கு அமைக்க அனுமதிக்கக் கூடாது என, கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்துறை மற்றும் கால்நடை துறை அதிகாரிகளிடமும் கடிதம் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி