உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பச்சை மிளகாய் சாகுபடி; வேளாண் பல்கலை அட்வைஸ்

பச்சை மிளகாய் சாகுபடி; வேளாண் பல்கலை அட்வைஸ்

உடுமலை; பச்சை மிளகாய் சாகுபடிக்கு, நாற்றங்கால் அமைக்கும் முறைகள் குறித்து கோவை வேளாண் பல்கலை., வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.நாற்றங்கால் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு ஒரு கிலோ தேவையாகும். விதை வாயிலாக பரவும் நுனிக்கருகல் நோய், பழம் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது ட்ரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியை ஹெக்டேருக்கு, 2 பொட்டலம் வீதம் விதை நேர்த்தி செய்வதால், தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்குக் குறைக்கலாம்.நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்கு குப்பை இட்டு 45 செ.மீ., இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ., இடைவெளியில் நடவேண்டும்.அடியுரமாக ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும்.தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ