உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேர்வாடலை கட்டுப்படுத்த பசுந்தாள் உரங்கள்

வேர்வாடலை கட்டுப்படுத்த பசுந்தாள் உரங்கள்

உடுமலை; தென்னையில் வேர் வாடல் நோயை கட்டுப்படுத்த, பசுந்தாள் உரங்களை பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அத்துறையினர் கூறியதாவது: தென்னை மரங்களில் வேர் வாடல் நோயை தடுக்க, பசுந்தாள் உரங்களான தட்டைப்பயிர், சணப்பை, கலப்பகோனியம், பியூரேரியா மற்றும் தக்கைப்பூண்டு ஆகியவற்றை வட்டப்பாத்தியில் வளர்த்து பூக்கும் முன் மடக்கி உழுதுவிட வேண்டும். அதிகளவில் இயற்கை உரங்கள் (தொழு உரம், உயிர் உரம்) ஆகியவற்றை இட்டு போதுமான அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, மக்கிய தொழு உரம் - 50 கிலோ, யூரியா 1.30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ (ஒரு மரத்திற்கான அளவு) ஆகிய அனைத்தையும் இரண்டு சமபாகங்களாக பிரித்து 6 மாத இடைவெளியில் இரண்டு முறை இட வேண்டும். ஒரு மரத்திற்கு 50 கிராம் அஸோஸ்பைரில்லம், 50 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 100 கிராம் அஸோபாலம் உடன் 50 கிராம் வேர் உட்பூசணத்தைமக்கிய தொழு உரத்துடன் கலந்து இளம்வேர்களில் படும்படி இட வேண்டும். ஆண்டுக்கு, 10 காய்களுக்கும் குறைவாக காய்க்கும் மரங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும். இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ