மேலும் செய்திகள்
பொங்கலோ பொங்கல்; பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்
14-Jan-2026
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கல்வித்துறையுடன் இணைந்து, காங்கயம் கல்வி நிறுவனங்கள் சார்பில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர் களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கயத்தில் உள்ள கல்லுாரி, அப்துல் கலாம் அரங்கில் இந்நிகழ்ச்சி நடந்தது. காங்கயம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர கவுடா வரவேற்றார். தொழில் நுட்பக்கல்லுாரி முதல்வர் ராம்குமார்; வணிகவியல் கல்லுாரி முதல்வர் சுரேஷ்; மருந்தியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாடவியல் நிபுணர்கள், ஸ்ரீனிவாசன், லட்சுமி தேவி, குமரவேலு, மதியழகு, ராமகிருஷ்ணன், சுரேஷ், மாசிலாமணி, கணேஷ் ஆகியோர் கருத்துகளை வழங்கினர். கல்லுாரி சேர்க்கைத் துறை தலைவர் விக்ரமாதித்த கிங் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது தேர்வெழுதும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
14-Jan-2026