உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்பிரிங் மவுன்ட் பள்ளியில் கும்மியாட்டம் அரங்கேற்றம்

ஸ்பிரிங் மவுன்ட் பள்ளியில் கும்மியாட்டம் அரங்கேற்றம்

திருப்பூர்; அவிநாசி அருகேயுள்ள ஸ்பிரிங் மவுன்ட் பப் ளிக் பள்ளியில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 180வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைவர் நளினி பிரபுசங்கர், பள்ளியின் முதல்வர் மகாலட்சுமி, கும்மியாட்டக்குழு தலைவர் பழனிசாமி ஈஸ்வரமூர்த்தி, சிறப்பு விருந்தினர் ரேணுகாதேவி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, தமிழகத்தின் பாரம்பரிய கும்மிக்கலையை பெற்றோர்களும் மாணவர்களும் பாரம்பரிய உடையணிந்து அரங்கேற்றினர். இத்தகைய நிகழ்ச்சிகள் இளம் தலைமுறைக்கு பண்பாட்டு விழிப்புணர்வை உருவாக்கும் என்று நிகழ்வைக் கண்ட விருந்தினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை