உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீண்டும் புதர் மண்டிய அனுமன் கோவில்

மீண்டும் புதர் மண்டிய அனுமன் கோவில்

பல்லடம்; பல்லடம் அடுத்த மாதப்பூர் கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த அனுமந்தராயர் கோவில் உள்ளது. கோவில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் முட்புதர்களுக்குள் மூடப்பட்டு கிடந்தது. 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, கடந்த, 2023 ஏப்., மாதம், முப்புதர்கள் அகற்றப்பட்டு, கோவில் வெளிக்கொண்டுவரப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்யப்படும் என்றும் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்தனர். தற்போது வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையும், மாயமான நிலையில், முட்புதர்கள் மீண்டும் முளைத்து கோவிலை மூடியுள்ளன.மீண்டும் பழைய நிலைக்கே கோவிலை கொண்டு சென்று வரும் அறநிலையத்துறையின் செயல்பாடு, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ