உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார பணியாளர் வருகை பதிவேடு ஆய்வு

சுகாதார பணியாளர் வருகை பதிவேடு ஆய்வு

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, மாட்டு கொட்டகையில் உள்ள சுகாதார பிரிவு அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதார பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, பணிக்கு சரியாக வராத நபர்கள், பணி ஓய்வு பெற இருப்பவர்கள், புதியதாக எந்த வார்டுகளில் பணியாளர்கள் நியமிப்பது மற்றும் துாய்மை பணியாளர்கள் நீண்ட துாரம் இருந்து பணிக்கு வருபவர்களை, அருகில் உள்ள மண்டலங்களுக்கு இடம் மாறுதல் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கமிஷனர் ராமமூர்த்தி உட்பட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ