உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசியில் காற்றுடன் கன மழை

அவிநாசியில் காற்றுடன் கன மழை

அவிநாசி; திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக வெயில் கொளுத்தியது. மதியத்திற்கு மேல், திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருப்பூரில் சில இடங்களில் சாரல் மழை காணப்பட்டது. காலநிலை குளுகுளுவென மாறியது. அவிநாசியில் நேற்று மதியம் முதல் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. சிறிது நேரத்திலேயே கனமழை பெய்யத் துவங்கியது. அதனுடன் பலமாக காற்றும் வீசியது. இதனால். வேலாயுதம்பாளையம் பகுதியில் மங்கலம் செல்லும் ரவுண்டானா பிரிவிலிருந்து அய்யப்பன் கோவில் செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை இருந்தது. அஸ்திவாரத்துடன் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு பீமுடன் நிழற்குடை ரோட்டில் சாய்ந்தது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாரும் அப்போது ரோட்டை கடக்கவில்லை. கனமழை காரணமாக அவிநாசியில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் சாக்கடையில் புகுந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் தேங்கியது. இதனால் நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ