மேலும் செய்திகள்
உயர்மின் விளக்கு அமைக்க பயணியர் வலியுறுத்தல்
09-Jan-2026
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், கோவை, பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள், பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக மக்கள் நகராட்சிக்கு பல முறை கோரிக்கை விடுத்தனர். எனவே, மக்கள் நலன் கருதி இதை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
09-Jan-2026