மேலும் செய்திகள்
பவானி ஆற்றில் குளிக்க கூடாது; போலீஸ் எச்சரிக்கை
31-May-2025
அவிநாசி; திருப்பூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் கேசவன், பி.டி.ஓ., (கிராமம்) விஜயகுமாரிடம் அளித்த மனு:அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. சட்ட விரோத பவானி ஆற்று குடிநீர் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.அப்பகுதியில் சில குடியிருப்புகளுக்கு வீடு தோறும் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை, கண்டிக்கிறோம். ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீதி ஆற்று குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. அதையும் கண்காணித்து மக்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் குடிநீர் வினியோகிக்க வேண்டும். சட்ட விரோதமாக குடிநீர் வினியோகிக்கும் பிளம்பர் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-May-2025