உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்து முன்னணி நிர்வாகி காருடன் சிறைப்பிடிப்பு

ஹிந்து முன்னணி நிர்வாகி காருடன் சிறைப்பிடிப்பு

பல்லடம்; திருப்பரங்குன்றத்தில், ஹிந்து முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்னர். இதனால், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பலரையும், போலீசார் வீட்டிலேயே சிறை பிடித்தனர்.திருப்பூரில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நேற்று காலையிலேயே சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மாலை, பல்லடம் வந்த மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமாரை, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையிலான போலீசார் காருடன் சிறைப்பிடித்தனர்.தகவல் அறிந்து வந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். காரை ரோட்டில் நிறுத்தியபடி போலீசார் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு பின், கிேஷார்குமாரை போலீசார் விடுவித்தனர். இதனால், பல்லடம் - திருப்பூர் ரோட்டில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ