ஹோமியோபதியில் பக்க விளைவு இல்லை; கே.ஆர்.என்., மெடிக்கல் சென்டர் நம்பிக்கை
''குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலவித நோய்களுக்கு சிறந்த தீர்வாக ேஹாமியோபதி மருத்துவம் விளங்குகிறது'' என்கிறார், ஹோமியோபதி மருத்துவத்தில், 20 ஆண்டு அனுபவம் பெற்ற, அவிநாசி சேவூர் கே.ஆர்.என்., ேஹாமியோபதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் டாக்டர் ராஹிலா ரகுமான்.இதுகுறித்து, அவர் கூறியதாவது;ேஹாமியோபதி மருத்துவம், கடந்த, 200 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன், இந்த சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். உலகளவில் அதிகம் பின்பற்றப்படும் மருத்துவத்தில், ேஹாமியோபதி மருத்துவம், இரண்டாமிடத்தில் உள்ளது. பலவித நோய்களுக்கு நீண்ட கால தீர்வாக, பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக இருந்து வருகிறது.இம்மருத்துவ முறையில் நாள்பட்ட மற்றும் கடுமையான பல நோய்களை, குறைந்த மருத்துவ காலத்தில் விரைந்து குணப்படுத்த முடியும். குழந்தைகளுக்கு வாய் வழியாக மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை கிருமி தொற்று, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு, சிறந்த முறையில் சிகிச்சையளிக்க முடியும்.அல்சர், செரிமான பிரச்னை, தைராய்டு, மலச்சிக்கல், மூலம், தோல் வியாதி, எலும்பு தசை மற்றும் மூட்டு வலி, சோர்வு, ஒற்றை தலைவலி உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு, ேஹாமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்ப்பு சக்தி இல்லாமல் நோய் வாய்ப்படும் சூழலில், எதிர்பாற்றல் அதிகரிக்க செய்யும் மருத்துவ முறை உள்ளன.கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு, இது, பாதுகாப்பான மருத்துவ முறை. நடுத்தர வயதினரை அதிகம் பாதிக்கும் சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களுக்கும் தீர்வு உண்டு. ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்வற்றுக்கு , பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 95003 00333,96263 00660 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.