உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவு வீச்சு; பல்லடம் அருகே அதிர்ச்சி: போலீசார் விசாரணை

பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவு வீச்சு; பல்லடம் அருகே அதிர்ச்சி: போலீசார் விசாரணை

பல்லடம்; பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்கள் அலறி அடித்து ஓட்டமெடுத்தனர். தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்களின் உதவியுடன், மனிதக் கழிவை அப்புறப்படுத்தி, ஆசிட், பினாயில் ஊற்றி சுத்தப்படுத்தினர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கவேல் கூறுகையில், ''வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. மாணவ மாணவியர், வகுப்பறைக்குள் மனித மலம் கிடப்பதாகவும், கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி, அலறியடித்து வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.துப்புரவு பணியாளர் மூலம், வகுப்பறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், வகுப்பறையை தற்காலிகமாக பூட்டி வைத்துள்ளோம். சமூக விரோதிகள் யாரோ இச்செயலை செய்துள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், காமநாயக்கன்பாளையம் போலீசாரிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.அரசு துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. பள்ளி சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதும், இரவு காவலர் இல்லாததும், சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. நேற்று முன்தினம், அதிகாலை, பள்ளி வளாகத்தில் நுழைந்த சமூக விரோதி, மனித மலத்தை வகுப்பறைக்குள் வீசியதுடன், வகுப்பறை சுவற்றிலும் பூசியுள்ளனர். இச்சம்பவம், பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நினைவுக்கு வந்த 'வேங்கை வயல்'புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வகையில், காமநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தை அரங்கேற்றிய சமூக விரோதியை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது, ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ