உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனிதாபிமானம் மேலோங்க வேண்டும்

மனிதாபிமானம் மேலோங்க வேண்டும்

திருப்பூர்;உலக சமூக நீதிநாளை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், அலகு - 2 சார்பில், 'சமூக நீதிக்கு சர்வதேச ஒத்துழைப்பு' என்ற மையக்கருத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்து, பேசுகையில், ''உலக மக்கள் அனைவரும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், உணவு, பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இல்லாமல், ஒரே சமூகமாக மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை தான், இந்த தினத்தின் கருத்து வலியுறுத்துகிறது,'' என்றார்.நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் பாலசுப்ரமணியம், தேன்மொழி, சுமதி,பாலாமணி, மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்