உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உண்ணாவிரதம்! விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

உண்ணாவிரதம்! விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

அவிநாசி: விசைத்தறி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வரும், ஏப்., 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக, கூட்டுக் கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.கடந்த 2022ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். ஒப்பந்த கூலியை குறைக்காமல் வழக்கும் வகையில் சட்டப் பாதுகாப்புடன் கூடிய புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திட ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று ஒன்பதாவது நாளாக நீடித்த போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டு கமிட்டி கூட்டம் தெக்கலுாரில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் நடைபெற்றது.கூட்டுக் கமிட்டி நிர்வாகிகள் கூறியதாவது:வேலை நிறுத்தம் காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதில்லை. நேரடியாகவும் மறைமுகமாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தினமும், 75 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்படுவதால், இதுவரை, 270 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறிக்கூடங்கள் தொடர்ந்து இயங்காமல் உள்ளதால், கிராமப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.திருப்பூர் மற்றும் கோவை கலெக்டர் தலைமையிலும் நடந்த பேச்சில் தீர்வு எட்டப்படவில்லை. தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் ஏப்., 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ