உள்ளேன் அய்யா... பள்ளிகள் மீண்டு திறப்பு
'உள்ளேன் அய்யா...' என்ற குரல் மீண்டும் ஒலிக்கும். திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்க ஆயத்தமாகியுள்ளன.புதிய கல்வியாண்டுக்கான அட்மிஷன், மார்ச் 1ம் தேதியே அரசு பள்ளிகளில் துவங்கியது. ஏப்ரல் இறுதி வரை குறைந்திருந்த அட்மிஷன், மே மூன்றாவது வாரத்துக்கு பின் சுறுசுறுப்பானது. மே மாதம் கடைசி பத்து நாட்களில் மட்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிகளை நாடி வந்துள்ளனர்.திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 4,679 பேர் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக, முதல் வகுப்பில், 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவர் இணைந்துள்ளதாக, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, மார்ச் மாதத்தில் இருந்து அறிவிப்புகள் வெளியிட்டு வந்தாலும், ஏப்ரலில் முழுவீச்சில் பள்ளி நிர்வாகங்கள் பணியில் ஈடுபட்டன. மே, 20ம் தேதி வரை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வந்தனர். பாடப்புத்தகங்கள்இன்று வினியோகம்
மே மூன்றாவது வாரம் முதல் சீரான இடைவெளியில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். விடுபட்டவர்கள் இருப்பின், ஜூன், 5க்குள் புத்தகம் வழங்கப்பட உள்ளது.