உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளிக்கு பின் வடமாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

தீபாவளிக்கு பின் வடமாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

திருப்பூர் : பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும், உள்நாட்டு பனியன் ஆடைகள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதன்காரணமாக, தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும், தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. கண்காட்சிகள் வாயிலாக, புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை வாங்கி நிறுவியுள்ளன.கடந்த சில மாதங்களாக, பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர் வரத்து அதிகரித்தது; அடுத்ததாக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், பூர்த்தி செய்யவும் தயாராக வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அழைப்புவிடுத்தது.தீபாவளி பண்டிகைக்கு பின், திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இடமாறுதல் நடக்கும்; அதன்காரணமாக, புதிய தொழிலாளர் மற்றும் அலுவலர்கள் தேவையும் அதிகரிக்கிறது. அதற்காக, புதிய தொழிலாளர்களை அழைத்துவர, ஏஜன்டுகள் நியமிக்கப்படுகின்றனர்.திருப்பூரில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களும், சொந்த ஊர்களுக்கு சென்று, திருப்பூர் வர தயாராக உள்ள நபர்களை அழைத்து வந்து வேலைக்கு சேர்க்கின்றனர். அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு பிறகு, வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் வருவது அதிகரித்துள்ளது.தினமும், கூட்டமாக வரும் தொழிலாளர்களை வரவேற்பு, பனியன் நிறுவனங்கள் வாகனங்களில் அழைத்துச்செல்கின்றன. இதேபோல், நுாற்பாலைகளின் தொழிலாளர் தேவையும், வடமாநில தொழிலாளர்களை கொண்டே நிரப்பப்படுகிறது.ரயில்வே ஸ்டேஷனுக்கு, வடமாநிலங்கள் வழியாக வரும் ரயில்கள் வரும் போது, அதிகப்படியான நபர்கள், திருப்பூரில் கால்பதிக்கின்றனர். வெளியே காத்திருக்கும் நபர்கள், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று பணியில் அமர்த்துகின்றனர்.பனியன் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும், பின்னலாடை உற்பத்தி அதிகரிக்கிறது; தொழிலாளர் தேவையும் அதிகரிக்கிறது. இவற்றை சமாளிக்க ஏதுவாக, வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். சில வாரங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்து, இலகுவான பணிகளில் அமர்த்தப்படுவர். திறமையை பொறுத்து, தையல் வேலையும் கொடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை