உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கச்சேரி வீதியில் விதிமீறல் அதிகரிப்பு

கச்சேரி வீதியில் விதிமீறல் அதிகரிப்பு

உடுமலை; உடுமலை நகரம், கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜெ.எம்., 1, 2 கோர்ட், தலைமை அஞ்சலகம் ஆகிய அரசு அலவலகங்கள் வரிசையாக அமைந்துள்ளன.இந்த வீதியில் இருபுறங்களிலும் அதிகரித்த ஆக்கிரமிப்புகள் காரணமாக, அரசு அலுவலகங்களுக்கு வரும் வாகன ஓட்டுநர்கள் திணறி வந்தனர்.தளி ரோடு வழியாக, அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட கச்சேரி வீதி நெரிசலில் சிக்கி பாதிக்கப்படும் நிலை இருந்தது.ஆக்கிரமிப்புகள் காரணமாக, அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல், டி.எஸ்.பி., அலுவலக ரோட்டில் நிறுத்தப்பட்டு வந்தன.இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, கச்சேரி வீதியில், சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சி சார்பில், தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்; தாலுகா அலுவலக சுற்றுசுவர் பகுதியிலிருந்து இருபுறங்களிலும், இருந்த தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.தாலுகா அலுவலகத்தின் எதிர்புறமுள்ள காலியிடம், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யவும் ஒதுக்கப்பட்டது.ஆனால், வழக்கம் போல், ரோட்டில், வாகனங்களை நிறுத்திச்செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களால், கச்சேரி வீதியில், நெரிசல் தொடர்கிறது.போக்குவரத்து போலீசார், அரசு அலுவலகங்கள் முன், 'பார்க்கிங்' யார்டு அமைத்து, வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும். விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ