தகவல் தொழில்நுட்ப சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
திருப்பூர் : திருப்பூர் தகவல் தொழில் நுட்ப சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.இச்சங்கத்தின், 17வது ஆண்டு நிர்வாகிகள் பதவியேற்பு விழா, திருப்பூர் பிருந்தாவன் ஓட்டலில் நடைபெற்றது. புதிய தலைவராக பாலகுமார்; செயலாளர் முரளிதரன்; பொருளாளராக சனுாப் ஆகியோர் பதவியேற்றனர். மேலும், துணை தலைவராக, மவுலிதரன், இணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டமைப்பு தலைவர் சுனில்குமார், செயலாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பதவியேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகளை முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்தினர். சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.