உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வதேச மகிழ்ச்சி தினம்; பள்ளி மாணவர்கள் சாதனை

சர்வதேச மகிழ்ச்சி தினம்; பள்ளி மாணவர்கள் சாதனை

உடுமலை; சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று (20ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி மடத்துக்குளம் பகுதி ஓட்டமடம் யுனைடெட் பப்ளிக் பள்ளியில், இரண்டு சாதனைகளை நிகழ்த்தினர். முதலாக, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள, 240 மாணவர்கள் ஒன்றிணைந்து சிரிப்பு சின்னத்தை உருவாக்கினர்.தொடர்ந்து நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, 233 மாணவர்கள் சர்வதேச மகிழ்ச்சி நாள் தொடர்பான, 100 வார்த்தைகள் கொண்ட வாசகத்தை படித்தனர். மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ