உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாய்கள் வெறிநாய்கள் தொடர்பான பேட்டி

நாய்கள் வெறிநாய்கள் தொடர்பான பேட்டி

கன்றை கொன்ற நாய்...

அமைதியாக இருந்த தெருநாய்கள் வெறிநாயாக மாறுவதற்கான காரணத்தை கண்டறிந்து, சரிசெய்ய வேண்டும். கோழி மற்றும் இறைச்சிக்கடை கழிவுகளை உண்ணும் வெறி நாயாக மாறி, ஆடுகளை கடித்து குதறுகின்றன. எனது சகோதரர் வீட்டில், புதிதாக பசுமாடு ஈனிய கன்றை, வெறிநாய்கள் கடித்து கொன்றுவிட்டன. அந்த மாடு தொடர்ந்து அழுது கொண்டு, கன்றை காணாமல் கத்துவது மிகவும் சோகமாக இருக்கிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சேனாதிபதி காங்கயம்.கண்காணிக்கிறோம்...தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கண்டியன்கோவில் ஊராட்சியில், நாய்களை பதிவு செய்து, பாஸ் வழங்கி வருகின்றனர். மற்ற நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு குழு அமைத்து, கண்காணித்து வருகிறோம். வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து, வளர்ப்பு செல்ல பிராணிகளை பதிவு செய்து வருகிறோம். வீட்டில் வளர்க்கப்படாத நாய்களை அப்புறப்படுத்தவும், கால்நடைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்துசாமி கண்டியன் கோவில்நடவடிக்கை வேண்டும்!கடத்துார் கிராமத்தில், நெல்வயல்களில் காட்டுப்பன்றி புகுந்து அட்டகாசம் செய்து விடுகின்றன. தெருநாய் தொல்லையும் அதிகரித்துள்ளது. கோழிகளை, பிடித்துச்சென்று கொன்று தின்கின்றன. இதேபோல், கன்றுக்குட்டிகளையும் கொல்கின்றன. தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இனிவரும் நாட்களில், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மீதும் பாயத்துவங்கிவிடும்.- வெள்ளியங்கிரி மடத்துக்குளம்.

நடவடிக்கை வேண்டும்!

கடத்துார் கிராமத்தில், நெல்வயல்களில் காட்டுப்பன்றி புகுந்து அட்டகாசம் செய்து விடுகின்றன. தெருநாய் தொல்லையும் அதிகரித்துள்ளது. கோழிகளை, பிடித்துச்சென்று கொன்று தின்கின்றன. இதேபோல், கன்றுக்குட்டிகளையும் கொல்கின்றன. தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இனிவரும் நாட்களில், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மீதும் பாயத்துவங்கிவிடும்.- வெள்ளியங்கிரி மடத்துக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ