உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இலவச பயிற்சிக்கு இன்று நேர்காணல்

 இலவச பயிற்சிக்கு இன்று நேர்காணல்

திருப்பூர்: திருப்பூர் - காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில், கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, 'சிசிடிவி' கேமரா, தீ எச்சரிக்கை அலாரம், புகை கண்டறியும் கருவி பழுது பார்த்தல் மற்றும் சரி செய்தல் தொடர்பான 13 நாள் முழு நேர இலவச பயிற்சி துவங்க உள்ளது. இதற்கான நேர்காணல், இன்று நடைபெறுகிறது. எழுத, படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இருபாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதி உள்ளது. பயிற்சி நாளில், காலை, மாலை டீ மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப்பின், தொழில் துவங்க, கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். விவரங்களுக்கு, 94890 43923, 90804 42586 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ