உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு அழைப்பு

 இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு அழைப்பு

திருப்பூர்: ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், இலவச கம்யூட்டர் 'டேலி' பயிற்சியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேரம் கம்ப்யூட்டர் டேலி பயிற்சி இலவச வகுப்புகள் துவங்கவுள்ளன. குறைந்தபட்சம், பிளஸ் 2ம் வகுப்பு படித்த ஆண்கள் மட்டும் இதில் சேரலாம். கல்லுாரி மாணவர்கள், சுய தொழில் செய்வோர், வேலைக்குச் செல்வோர் உட்பட விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து பயிற்சி பெறலாம். மூன்று மாத காலம் பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். அனுபவம் வாய்ந்த கணக்காளர் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 63827 32443 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !