உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்திமலையில் ஆடிப்பெருவிழா நடத்தி பல வருஷமாச்சு! மறந்து போன மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி

திருமூர்த்திமலையில் ஆடிப்பெருவிழா நடத்தி பல வருஷமாச்சு! மறந்து போன மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி

உடுமலை; 'திருமூர்த்திமலையில், சுற்றுலா மேம்பாட்டுக்கும், பாரம்பரியத்தை பாதுகாக்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால், நடத்தப்பட்டு வந்த ஆடிப்பெருந்திருவிழா பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்தாண்டாவது விழா நடத்த வேண்டும்,' என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், 2009ல், உருவாக்கப்பட்ட போது, உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா தலங்களான, அமராவதி, திருமூர்த்தி அணை பகுதிகளில், பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என, தமிழக அரசால் உறுதியளிக்கப்பட்டது.கடந்த, 2013ல், திருமூர்த்திமலையில் கோடை விழா போல, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால், சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், அரசுத்துறைகளின் கண்காட்சி, கலைவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில், திரளான சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்களும் பங்கேற்றனர். பின்னர், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையையொட்டி, இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.'ஆடிப்பெருந்திருவிழா' என்ற பெயரில், இந்த விழாவை படகுத்துறை அருகே, அரசுத்துறை அரங்குகள் அமைத்து நடத்தினர். பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.இந்த விழாவால், அப்பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெற்றனர். திருமூர்த்திமலையில் நடைபெறும் பாரம்பரிய வழிபாடு குறித்தும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படுவதில்லை. ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்காக திருமூர்த்திமலை வரும் உள்ளூர் மக்களுக்கும் எவ்வித வசதிகளும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்படுவதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்ந்து புறக்கணிப்பு

மக்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து, உடுமலை பகுதியில், பெரியளவிலான மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை.திருமூர்த்திமலையில், ஆடிப்பெருந்திருவிழாவும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை.ஆடி அமாவாசையின் போது, வாகனங்களை நிறுத்தும் வசதி கூட இருப்பதில்லை. பிற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்துவதில்லை.பல முறை கோரிக்கை விடுத்தும், ஆடிப்பெருந்திருவிழாவை நடத்தவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை; தி.மு.க., மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை.மேம்பாட்டு திட்டங்களில், திருமூர்த்திமலை, அமராவதி அணை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான காரணங்களும் தெரியவில்லை.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி