உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீதிபோதனை வகுப்பு இனி கட்டாயம்

நீதிபோதனை வகுப்பு இனி கட்டாயம்

திருப்பூர்; பள்ளிகளில் மாணவர்களின் நற்பண்புகளை வளர்ப்பதற்கெனவே, நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டன.நீதி போதனையை கற்பிக்கும் கதைகள், பாடல்கள், விடுகதை, புதிர்கள் என, இன்னும் பல பல முறைகளில், மாணவர்களின் மனதில் நீதியும், நற்பண்புகளும் நிலை நிறுத்தப்பட்டன.மொபைல் போன், 'டிவி', சமூக ஊடகங்கள் என, மனதை பாழ்படுத்தும் விஷயங்கள் எதுவும் அவ்வளவாக ஆட்கொள்ளாத கால கட்டத்திலேயே நற்பண்புகளை கற்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது.ஆனால், இன்று, நொடிப் பொழுதில் மனதை கெடுத்து, உடலுக்கு ஊறுவிளைவிக்க செய்யும் வகையிலான வாய்ப்புகள் கண்முன்னே தெரிகின்றன. சமூக வலை தளங்களின் தாக்கம், விளம்பரம் வர்த்தகத்தின் ஆதிக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதை பாழ்படுத்தும் இணையதளங்கள் என, சுயத்தை இழப்பதற்கான ஏகப்பட்ட விஷயங்கள், மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்திருக்கிறது.இதில், இருந்து மாணவ சமுதாயத்தை மீட்டெடுப்பது என்பதும், மீண்டு வருவது என்பதும், சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.இவை ஏற்படுத்தும் விபரீதத்ததை நன்குணர்ந்த அரசு, இந்தாண்டு முதல் பள்ளிகளில் கட்டாயம், நீதி போதனை வகுப்புகளை நடத்தி, மாணவர்கள் மத்தியில் நற்பண்புகளை விதைத்து, வளர்த்தெடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியிருக்கிறது.நீதி போதனை, உடற்கல்வி போன்ற வகுப்புகளில் அது தொடர்பான பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும்; அதனை தவிர்த்து, பிற பாடங்களை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை