உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்பன் விழா -25 பேச்சு போட்டி; மாணவ, மாணவியருக்கு அழைப்பு

கம்பன் விழா -25 பேச்சு போட்டி; மாணவ, மாணவியருக்கு அழைப்பு

திருப்பூர்; திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், 'கம்பன் விழா -25' திருப்பூரில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடக்க உள்ளது. ஆக., 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு, திருப்பூர் லயன்ஸ் கிளப் கட்டடத்தில், 'கம்பன் கவி இன்பம்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடக்கிறது. திருப்பூர் மாநகரை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்; பேச்சுப்போட்டியில், ஐந்து நிமிடம் பேச வேண்டும்.வெற்றி பெறுவோருக்கு, ரொக்கப்பரிசு, சான்று வழங்கப்படும். அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி, மாலை, 4:00 மணிக்கு நடக்கும். 'வராது வந்த நாயகன்' என்ற தலைப்பில், ஆறு நிமிடங்களுக்கு மிகாமல் பேசலாம். பள்ளிக்கு இருவர் பங்கேற்கலாம். முதல் பரிசாக, 3,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக, 2,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக, 1,000 ரூபாயும் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக, மூன்று பேருக்கு, தலா, 500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து திருப்பூர் கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''கம்பன் விழா -25' பேச்சு போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர், வரும் ஆக., 10ம் தேதிக்குள், 93456 51066 என்ற 'வாட்ஸ் ஆப் எண்ணில் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, gmail.comஎன்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை