உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருவலுார் ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா  ஏப்., 9ல் தேரோட்டம்

கருவலுார் ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா  ஏப்., 9ல் தேரோட்டம்

அவிநாசி : கருவலுார் மாரியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவில், வரும் ஏப்., 9, 10, 11ம் தேதிகளில், தேரோட்டம் நடைபெற உள்ளது.கருவலுார் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 4ம் தேதி கிராமசாந்தி மற்றும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனம், புஷ்ப விமான மலர் பல்லாக்கு ஊர்வலம் நடக்க உள்ளது.வரும் 8 ம் தேதி இரவு, அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், தொடர்ந்து யானை வாகன ஊர்வலமும் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு, அம்மன் தேருக்கு எழுந்தருளி, தேர் வடம் பிடித்து, தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம், 9,10 11 ம் தேதிகளில் நடக்கிறது; 11ம் தேதி மாலை, தேர் நிலையை வந்தடையும்.தொடர்ந்து, 12ம் தேதி தெப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, குதிரை வாகன காட்சியும், 13ம் தேதி காலை, சுவாமி தரிசனமும், மாலை அம்மன் சப்பரத்தில் திருவீதியுலா நிகழ்ச்சியும், இரவு, அன்ன வாகனம் மஞ்சள்நீர் விழ நடக்கிறது; 16 ம் தேதி பாலாபிேஷகமும், மறுபூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ