உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காவிலிபாளையம் ரோடு வாகன ஓட்டிகள் பெரும்பாடு

காவிலிபாளையம் ரோடு வாகன ஓட்டிகள் பெரும்பாடு

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, காவிலிபாளையம் பிரிவு ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி, காலேஜ் ரோடு, காவிலிபாளையம் பகுதியில், ஒரு பகுதி சாலையில் பல இடங்களில் குழி ஏற்பட்டு, அவற்றில் மழைநீர், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இரவில் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் நிலை தெரிவதில்லை; தடுமாறி விழுகின்றனர். நகரின் பல இடங்களில் இத்தகைய நிலையை காண முடியும்.இதற்கு காரணம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சாலைக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறுவது தான் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை