கொங்கு விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா
திருப்பூர: திருப்பூர், கே.பி.என்., காலனி கொங்கு விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.கடந்த, 16ம் தேதி, மங்கள இசை, விக்னேஷ்வர பூஜையுடன், கும்பாபிேஷக விழா துவங்கியது. கணபதி ேஹாமம், கோபுர கலசம் வைத்தல், விநாயகர் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்தன; மாலையில், முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீகொங்கு விநாயகர் மகா கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து, மகா அபிேஷகம், வெள்ளி கவச அலங்காரபூஜை, தசதரிசனம், மகாதீபாராதனை நடந்தது. கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.