உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்; முதல்வர் நாளை திறப்பு

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்; முதல்வர் நாளை திறப்பு

திருப்பூர்; முதல்வரை வரவேற்கும் வகையில் திருப்பூர் தயாராகி வருகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்.நாளை (22ம் தேதி) திருப்பூர் வருகை தரும் முதல்வர், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் மற்றும் வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய வற்றைத் திறந்து வைக்கிறார். அதன் பின் நாளை மாலை திருப்பூரில் ரோடு ேஷா நடத்தி பொதுமக்களைச் சந்திக்கிறார்.பின்னர் நாளைமறுநாள் உடுமலையில் நடைபெறவுள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவுள்ளார். முதல்வரை வரவேற்கும் விதமாக திருப்பூர் நகரம் முழுவதும் தீவிர துாய்மைப் பணி, ரோடுகள் சீரமைப்பு, கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி, குப்பைகள் அகற்றும் பணியும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.மேலும் நகரின் பிரதான ரோடுகளில் ரோட்டின் மையத்திலும், ரோட்டோரங்களிலும், மையத் தடுப்புகளிலும் கட்சியினர் கட்சிக் கொடிகளை கட்டி வைத்துள்ளனர்.நகரப் பகுதியில் உள்ள நடை மேம்பாலங்களில் முதல்வரை வரவேற்று கட்சி நிர்வாகிகள் பெயரில் பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளன.தங்கள் வார்டு பகுதியிலிருந்து முதல்வரை வரவேற்க கட்சியினரை திரட்டும் வகையில் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.கோவில் வழி பஸ் ஸ்டாண்டுக்குதிருப்பூர் குமரன் பெயர்திருப்பூர் மாவட்டம் வருகை தரவுள்ள முதல்வரை வரவேற்கவும், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தாராபுரம் ரோட்டில் கோவில்வழியில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை முதல்வர் திறக்கவுள்ளதால், அதன் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் அமித் நேரில் சென்று பார்வையிட்டார்.இந்த பஸ் ஸ்டாண்டுக்கு சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் நினைவாக அவரது பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வளாகத்தில் திருப்பூர் குமரன் நினைவு பஸ் ஸ்டாண்ட் என்ற பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.வேலம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கிறார். முதல்வர் வருகையொட்டி, திருப்பூர் - அவிநாசி ரோட்டில் இருந்த மேடு பள்ளங்களில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டு வருகிறது.15 வேலம்பாளையம் மற்றும் புதிய மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் குவிந்து கிடந்த மண் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. 15 வேலம்பாளையம் ரோட்டில் அதிக பாதிப்பு இருந்த இடத்தில் புதிதாக ரோடு போட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையை சுற்றியுள்ள அனைத்து ரோடு பகுதிகளும் பளிச்சென உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ