மேலும் செய்திகள்
மாநில கபடி போட்டி துவக்கம்
23-Sep-2024
பல்லடம் : திருப்பூரில், 15வது மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டிகள் சமீபத்தில் நடந்தது. பல்லடம் வட்டாரத்தில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று பதக்கங்கள், பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மூத்த வீரர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நண்பர்கள் கால்பந்து குழு நிர்வாகி திருமூர்த்தி வரவேற்றார். முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு மூத்தோர் விளையாட்டு குழு பொருளாளர் செல்ல முத்து, துணை தலைவர் விஸ்வநாதன், நடராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.மூத்த வீரர் நாகரத்தினம் நன்றி கூறினார்.
23-Sep-2024