கூடாரை வெல்லும் சீர் விழா பெருமாள் கோவிலில் வழிபாடு
திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடர்ச்சியாக, நேற்று கூடாரை வெல்லும் உற்சவமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலையில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய நம்பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரண்டாம் நாளான நேற்று காலை, கூடாரை வெல்லும் உற்சவம் நடந்தது. மாலையில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன், நவரத்தின அங்கியுடன், நம்பெருமாள் அருள்பாலித்தார்.விழா நிறைவாக வரும் 19ம் தேதி திருவாய்மொழி திருநாள் சாற்றுமுறை, ஆழ்வார் மோட்ஷம், இரவு பத்து நிறைவு பூஜைகள் நடக்கிறது.n அவிநாசியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை கூடாரை வெல்லும் சீர் விழா நடைபெற்றது. கோவிலிலுள்ள துளசிமாடம் முன் ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.