கடிதம் எழுதும் போட்டி
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்,தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி, கடந்த மாதம், 14ம் தேதி துவங்கி, வரும், டிச., 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநிலம் மற்றும் தேசிய அளவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. கடிதம் எழுதும் போட்டி, பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் முன்னிலையிலும் நடைபெற்றது.