உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயலி மூலம் கடன் டெய்லர் தற்கொலை

செயலி மூலம் கடன் டெய்லர் தற்கொலை

அவிநாசி: அவிநாசி, ஆட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 42. மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தங்கராஜூம், வரது மனைவியும், கைகாட்டிப்புதுாரிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், டெய்லராக வேலைக்கு சென்று வருகின்றனர். தங்கராஜ் ஆன்லைன் செயலி, தனியார் நிதி நிறுவனங்கள், கிரெடிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாக, அதிகளவில் கடன் வாங்கி தவணைகள் செலுத்தி வந்துள்ளார்.ஒரு கட்டத்தில், கடன் தவணைகளை செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை