திருப்பூரில் தவறவிட்ட பர்ஸ்பல்லடத்தில் ஒப்படைப்பு
பல்லடம், ; திருப்பூரில் இருந்து அரசு பஸ் (டிஎன்.39.என். 0474), நேற்று காலை, 5.40 மணிக்கு வழக்கம்போல் உடுமலை புறப்பட்டது.கேத்தனுார் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் முருகன் என்பவரது பர்ஸ், அவர் கேத்தனூரில் இறங்கும்போது தவற விட்டார். அதைக்கண்ட முருகன், திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.அரசு பஸ் நடத்துனர் ராமு, பஸ்ஸில் கிடந்த மணி பர்ஸ் குறித்து, பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்திலிடம் தெரிவித்தார். முருகன் வரவழைக்கப்பட்டு அவரிடம், பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து கழக பொறுப்பாளர் சதீஷ் மற்றும் அரசு பஸ் டிரைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், முருகனிடம் பர்ஸ்ஒப்படைக்கப்பட்டது.