உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான குழாய் உடைப்பு: வீணாகி வரும் குடிநீர்

பிரதான குழாய் உடைப்பு: வீணாகி வரும் குடிநீர்

உடுமலை; உடுமலை - தாராபுரம் ரோட்டில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.உடுமலை நகராட்சி, தாராபுரம் ரோட்டில், நகரின் வடக்கு பகுதியிலுள்ள வார்டுகளுக்கு குடிநீர் வினியோகத்திற்காக, பிரதான குடிநீர் குழாய் அமைந்துள்ளது. தாராபுரம் ரோடு பஸ் ஸ்டாப் அருகில், பிரதான குழாய் உடைந்து, அதிகளவு குடிநீர் வீணாகி வருவதோடு, ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ரோடு குண்டும், குழியுமாக மாறி வருகிறது. குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை