இ-நாம் திட்டத்தில் மல்லி ஏலம்
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மல்லி ஏலம் நடந்தது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மல்லி வரத்து அதிகரித்துள்ளது. அறுவடை செய்த மல்லியை விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூட உலர் களத்திற்கு கொண்டு வந்து காய வைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.நேற்று, 8 விவசாயிகள், 207 மூட்டை அளவுள்ள, 8.350 டன் மல்லியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ. 132.50 முதல், அதிகபட்சமாக, ரூ.140 வரை விற்பனையானது. மொத்தம், 11 லட்சத்து, 32 ஆயிரத்து, 269 ரூபாய் மதிப்பில் வணிகம் நடந்தது.