இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயற்சி; வாலிபர் கைது
திருப்பூர்; தஞ்சாவூரை சேர்ந்த, 22 வயது இளம்பெண். இவர் திருப்பூரில் தனது தோழிகளுடன், நொச்சிபாளையம் ஏ.பி. நகரில் வீடு எடுத்து தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 21ம் தேதி இளம்பெண் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். அப்போது, ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் மொபைல் போன் வைப்பதை பார்த்து கூச்சலிட்டார். உடனே, வீடியோ எடுக்க போனை வைத்த வாலிபர் தப்பியோடினார். பின் புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். அதேபகுதியை சேர்ந்த கட்டட வேலைக்கு சென்று வரும் கார்த்திக், 26 என்பவர் வீடியோ எடுத்தது தெரிந்தது. அவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.