உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை

ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை

உடுமலை; மடத்துக்குளம் வட்டாரம் கணியூர் ஐயப்பசுவாமி கோவிலில், மண்டல பூஜை மற்றும் சங்காபிேஷக பூஜை நடந்தது.மடத்துக்குளம் வட்டாரம் கணியூர், ஜோதிநகரில் உள்ள ஐயப்பசுவாமி கோவிலில் ஆண்டு விழா, மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிேஷக பூஜையும் நடந்தது.மண்டல பூஜையையொட்டி ஐயப்பசுவாமிக்கு, 24 வகையான மூலிகை நீர் மற்றும் ஐந்து வகையான புண்ணிய நதி தீர்த்தங்களிலும் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிேஷகம் நடந்தது.பல்வேறு வகையான மலர்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை, கணியூர் ஸ்ரீஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !